இரவில் நடுவழியில் நானும் தோழியும் கண்ட அந்த சம்பவம்..
மனிதாபிமானம் மிக்க மனிதர்களே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றனர். அந்த வகையில் ஒரு பொலிஸ்காரர் குறித்த எனது அனுபவங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன். அதே போல் இதுவும் வழியில் சந்தித்த ஒரு சிறந்த மனிதர் பற்றிய மனிதாபிமானம் நிறைந்த நினைவுகளாகும். 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றது. திகதி சரியாக நினைவில்லை. அன்று என் சொந்த ஊரான பண்டாரவளைக்கு சென்று வர திட்டமிட்டு பயணித்தோம். அந்த பயணத்தில் நான், என்னுடைய நண்பன் ஹசித, மற்றும் என் உயிர்த் தோழி ஆகிய மூவரும் ஒன்றாக பயணித்தோம். எங்கள் பயணம் 12 மணியளவில் கொழும்பில் ஆரம்பித்தது. நானும் எனது நண்பனும் மாறிமாறி வாகனத்தை செலுத்தினோம். ஹசிதவின் ஊர் ஓப்பநாயக்க எனப்படும் பிரதேசம், இது பலாங்கொடைக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்துள்ளது. அங்கு சென்று நண்பனை வீட்டில் விட்டுவிட்டு பயணத்தை தொடர்வதே திட்டமாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவன் தனது வேலையை காட்டிவிட்டான். அது வேறொன்றும் இல்லை, இரண்டு பேருக்கு கிட்டதட்ட எட்டுபேர் சாப்பிடும் அளவுக்கு உணவு. அப்படி ஒரு உபசரிப்பு. நண்பனின் மனைவி, அம்மா, அப்பா, குட்டி பிள்ளைகள் என அனைவரும் எங்களை ...