Posts

Showing posts with the label மலையகம்

இரவில் நடுவழியில் நானும் தோழியும் கண்ட அந்த சம்பவம்..

Image
மனிதாபிமானம் மிக்க மனிதர்களே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றனர். அந்த வகையில் ஒரு பொலிஸ்காரர் குறித்த எனது அனுபவங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  அதே போல் இதுவும் வழியில் சந்தித்த ஒரு சிறந்த மனிதர் பற்றிய மனிதாபிமானம் நிறைந்த நினைவுகளாகும். 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றது. திகதி சரியாக நினைவில்லை. அன்று என் சொந்த ஊரான பண்டாரவளைக்கு சென்று வர திட்டமிட்டு பயணித்தோம். அந்த பயணத்தில் நான், என்னுடைய நண்பன் ஹசித, மற்றும் என் உயிர்த் தோழி ஆகிய மூவரும் ஒன்றாக பயணித்தோம். எங்கள் பயணம் 12 மணியளவில் கொழும்பில் ஆரம்பித்தது. நானும் எனது நண்பனும் மாறிமாறி வாகனத்தை செலுத்தினோம். ஹசிதவின் ஊர் ஓப்பநாயக்க எனப்படும் பிரதேசம், இது பலாங்கொடைக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்துள்ளது. அங்கு சென்று நண்பனை வீட்டில் விட்டுவிட்டு பயணத்தை தொடர்வதே திட்டமாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவன் தனது வேலையை காட்டிவிட்டான். அது வேறொன்றும் இல்லை, இரண்டு பேருக்கு கிட்டதட்ட எட்டுபேர் சாப்பிடும் அளவுக்கு உணவு. அப்படி ஒரு உபசரிப்பு. நண்பனின் மனைவி, அம்மா, அப்பா, குட்டி பிள்ளைகள் என அனைவரும் எங்களை ...

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!

Image
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...! சமூக வலைத்தளங்களில் பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதன் தரத்தை அதிகரித்து எழுத்தாளர்களின் திறமையை மேலும் வெளிக்கொண்டுவரும் பொதுவான பக்கங்கள் இருப்பது குறைவாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது இந்த முயற்சி அமையும் என நினைக்கின்றேன். ஒரு இரசிகனாக என்னுடைய ஆய்வுகள், விமர்சனங்கள் அமையும். மேலும் அவற்றை துறைசார் விற்பன்னர்களுக்கும் கொண்டு சென்று களம் அமைக்க இது ஏதுவாக அமையும். இதன்படி எனது முதலாவது முயற்சி இதோ... கவிஞர் சிகரம் பாரதியின் "வாழ வேண்டும்" என்ற கவிதையே எனது இன்றைய பார்வையில்...  மனிதர்கள் பலரின் இடைக்கால வாழ்க்கையை நிறைக்கும் ஒரு விடயம், தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும், வழிதெரியாது தடுமாறிய பாதையையும் திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் விரக்தி. அத்தகைய ஒரு கவிதையே இது. கவிஞர் தலைப்பிலேயே அதனை விவரித்துவிடுகின்றார். எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு அழுத்தமான நினைவுதான் வாழ ...