Posts

Showing posts with the label கவிதை

அவளும் நானும் கனவில்...

Image
  ஆடிக் காற்றில் ஆங்கோர் ரோஜா சிரிக்கக் கண்டேன் ; மரங்களை முறித்திடுங் காற்றோ மலரைப் பல்லக்கிற் சுமந்திற்று!  வளைந்து மண்ணைத் தொட்டிடு மரங்கள் பந்தல் ஆயிற்று ; ஒடிந்து சிதரும் இலைகளதே அங்கே தோரணம் ஆயிற்று!  பறித்துப் பறக்கும் பூவிதழ் அனைத்தும் கம்பளம் விரித்தது ; இலைவழி தெறிக்கும் நீரோ பளிங்கு முத்துக்கள் தூவிற்று!  மல்லிகைக்கூட்டம் பன்னீர் ஆயிற்று மற்றபூக்களோ சாமரம் வீசிற்று ; விழிமூடி ஒதுங்கிய கூட்டம் தவறுணர்ந்து தவித்தே போயிற்று !  அப்போது விழித்தோர் அனைவருமே சிலையழகில் சிறையினர் ஆயினர் !! வண்ணந்தீட்டும் வண்ணத்துப் பூச்சியும் தேன்துளி தெளிக்கும் தேனீக்கூட்டமும் ; நிழற்குடை பிடித்திட்ட குருவிப்படையும்  பல்லக்கின் கூடவே பறந்தனலாயிற்று !  வேகமுங் கோபமும் வாளுமீட்டியும் விழிநேரே பாய்ந்திட்ட அம்பும் ; எனையே வந்து தொட்டிடத் துடிக்கும் கடார இரும்பும் !  போரினிடையே புகுந்த இவளுக்கு மொத்த விழிகளும் ஆரத்தியிட்டது !!  வேங்கை யானோ வீசியவாளில்  பிளந்தஅம்பின் விரிசல் ஊடே ; கொள்ளை அழகைக் கொள்ளை அடித்திடும் கொள்ளையன் ஆனேன் !  வீசிய வாளை உறையின...

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!

Image
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...! சமூக வலைத்தளங்களில் பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதன் தரத்தை அதிகரித்து எழுத்தாளர்களின் திறமையை மேலும் வெளிக்கொண்டுவரும் பொதுவான பக்கங்கள் இருப்பது குறைவாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது இந்த முயற்சி அமையும் என நினைக்கின்றேன். ஒரு இரசிகனாக என்னுடைய ஆய்வுகள், விமர்சனங்கள் அமையும். மேலும் அவற்றை துறைசார் விற்பன்னர்களுக்கும் கொண்டு சென்று களம் அமைக்க இது ஏதுவாக அமையும். இதன்படி எனது முதலாவது முயற்சி இதோ... கவிஞர் சிகரம் பாரதியின் "வாழ வேண்டும்" என்ற கவிதையே எனது இன்றைய பார்வையில்...  மனிதர்கள் பலரின் இடைக்கால வாழ்க்கையை நிறைக்கும் ஒரு விடயம், தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும், வழிதெரியாது தடுமாறிய பாதையையும் திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் விரக்தி. அத்தகைய ஒரு கவிதையே இது. கவிஞர் தலைப்பிலேயே அதனை விவரித்துவிடுகின்றார். எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு அழுத்தமான நினைவுதான் வாழ ...

காதலை காத்திடும் காதலன் மனது

Image
கருமேகங்கள் மூடிக்கொள்ள கவிஞர்க்கு நிலவு மறைக்கும்.. மறைவில் முறைக்கும் நிலவு என்னென்று அறியும் மேகத்தின் தவிப்பை....

என் அழகான நாட்கள்...!

Image
நானும் என் கடிகாரமும்  இணைபிரியா நண்பர்கள், இருவரும் ஓடியதை  ஓயாது கூறலாம். கனவுகளும் சவால்களும்  என்னை சாதனையாளனாக்கி கற்பனையில் காட்டி நின்ற  கனவுக் காலமது Image Copyrights reserved to respective owners only பருவம் ஒரு பக்கம் பார்வை ஒரு பக்கமாக  சமூக நாடகத்தில்  நாயகன் நான்! இன்றும் நான் நானாக இருக்காது  நாட்களின் நாளிகைகளுக்குள் கடிந்து கொள்ளும்  சிந்தனை இரைச்சலுக்கு  ஏமாற்றிய கனவுகளை சுமந்த  என் அழகான அன்றைய நாட்கள்....!