Posts

நீ இல்லாத நான்...

Image
நினைவு இல்லை பசி இல்லை உரக்கம் இல்லை ஆசைகள் இல்லை எதிரில் நீ நினைவில் நீ கனவில் நீ கண்ணுக்குள் நீ மறப்பதென்று ஆனாலும் நினைப்பதென்று ஆனாலும் முறைப்பதென்று ஆனாலும் அணைப்பதென்று ஆனாலும் - நீ வழியே இல்லை வந்துவிடு உயிரே....

இரவில் நடுவழியில் நானும் தோழியும் கண்ட அந்த சம்பவம்..

Image
மனிதாபிமானம் மிக்க மனிதர்களே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றனர். அந்த வகையில் ஒரு பொலிஸ்காரர் குறித்த எனது அனுபவங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  அதே போல் இதுவும் வழியில் சந்தித்த ஒரு சிறந்த மனிதர் பற்றிய மனிதாபிமானம் நிறைந்த நினைவுகளாகும். 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றது. திகதி சரியாக நினைவில்லை. அன்று என் சொந்த ஊரான பண்டாரவளைக்கு சென்று வர திட்டமிட்டு பயணித்தோம். அந்த பயணத்தில் நான், என்னுடைய நண்பன் ஹசித, மற்றும் என் உயிர்த் தோழி ஆகிய மூவரும் ஒன்றாக பயணித்தோம். எங்கள் பயணம் 12 மணியளவில் கொழும்பில் ஆரம்பித்தது. நானும் எனது நண்பனும் மாறிமாறி வாகனத்தை செலுத்தினோம். ஹசிதவின் ஊர் ஓப்பநாயக்க எனப்படும் பிரதேசம், இது பலாங்கொடைக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்துள்ளது. அங்கு சென்று நண்பனை வீட்டில் விட்டுவிட்டு பயணத்தை தொடர்வதே திட்டமாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவன் தனது வேலையை காட்டிவிட்டான். அது வேறொன்றும் இல்லை, இரண்டு பேருக்கு கிட்டதட்ட எட்டுபேர் சாப்பிடும் அளவுக்கு உணவு. அப்படி ஒரு உபசரிப்பு. நண்பனின் மனைவி, அம்மா, அப்பா, குட்டி பிள்ளைகள் என அனைவரும் எங்களை விடு

அவளும் நானும் கனவில்...

Image
  ஆடிக் காற்றில் ஆங்கோர் ரோஜா சிரிக்கக் கண்டேன் ; மரங்களை முறித்திடுங் காற்றோ மலரைப் பல்லக்கிற் சுமந்திற்று!  வளைந்து மண்ணைத் தொட்டிடு மரங்கள் பந்தல் ஆயிற்று ; ஒடிந்து சிதரும் இலைகளதே அங்கே தோரணம் ஆயிற்று!  பறித்துப் பறக்கும் பூவிதழ் அனைத்தும் கம்பளம் விரித்தது ; இலைவழி தெறிக்கும் நீரோ பளிங்கு முத்துக்கள் தூவிற்று!  மல்லிகைக்கூட்டம் பன்னீர் ஆயிற்று மற்றபூக்களோ சாமரம் வீசிற்று ; விழிமூடி ஒதுங்கிய கூட்டம் தவறுணர்ந்து தவித்தே போயிற்று !  அப்போது விழித்தோர் அனைவருமே சிலையழகில் சிறையினர் ஆயினர் !! வண்ணந்தீட்டும் வண்ணத்துப் பூச்சியும் தேன்துளி தெளிக்கும் தேனீக்கூட்டமும் ; நிழற்குடை பிடித்திட்ட குருவிப்படையும்  பல்லக்கின் கூடவே பறந்தனலாயிற்று !  வேகமுங் கோபமும் வாளுமீட்டியும் விழிநேரே பாய்ந்திட்ட அம்பும் ; எனையே வந்து தொட்டிடத் துடிக்கும் கடார இரும்பும் !  போரினிடையே புகுந்த இவளுக்கு மொத்த விழிகளும் ஆரத்தியிட்டது !!  வேங்கை யானோ வீசியவாளில்  பிளந்தஅம்பின் விரிசல் ஊடே ; கொள்ளை அழகைக் கொள்ளை அடித்திடும் கொள்ளையன் ஆனேன் !  வீசிய வாளை உறையினிலிட்டு மங்கை முன்னே மண்டியுமிட்டு ; வீரபுருஷன் எனக்கை

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!

Image
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...! சமூக வலைத்தளங்களில் பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதன் தரத்தை அதிகரித்து எழுத்தாளர்களின் திறமையை மேலும் வெளிக்கொண்டுவரும் பொதுவான பக்கங்கள் இருப்பது குறைவாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது இந்த முயற்சி அமையும் என நினைக்கின்றேன். ஒரு இரசிகனாக என்னுடைய ஆய்வுகள், விமர்சனங்கள் அமையும். மேலும் அவற்றை துறைசார் விற்பன்னர்களுக்கும் கொண்டு சென்று களம் அமைக்க இது ஏதுவாக அமையும். இதன்படி எனது முதலாவது முயற்சி இதோ... கவிஞர் சிகரம் பாரதியின் "வாழ வேண்டும்" என்ற கவிதையே எனது இன்றைய பார்வையில்...  மனிதர்கள் பலரின் இடைக்கால வாழ்க்கையை நிறைக்கும் ஒரு விடயம், தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும், வழிதெரியாது தடுமாறிய பாதையையும் திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் விரக்தி. அத்தகைய ஒரு கவிதையே இது. கவிஞர் தலைப்பிலேயே அதனை விவரித்துவிடுகின்றார். எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு அழுத்தமான நினைவுதான் வாழ

நள்ளிரவில் நான் சந்தித்த அந்த மூத்த பொலிஸ் அதிகாரி...!

Image
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நாள் சொந்த ஊரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன்(2019). நிறுவனத்தில் அன்று எனக்கு மாலை நேரத்தில் கடமையிருந்தது. தொழிலை முடித்துக்கொண்ட கையோடு, இரவு 11 மணியளவில் எனது வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கிய பயணம் அது, இரவு நேரம், வாகன நெரிசல் இருக்காது. நேர்த்தியான பாதை ஆகையால் சீரான வேகத்தில் என்னுடைய பயணம் தொடர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான தெரிவில் இடைக்கால பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க நானும் சத்தமாக பாடிக்கொண்டே பயணம் நீண்டது.  அதிகாலை 3 மணியிருக்கும், பலாங்கொடை நகரம் தாண்டியதும் நான் பயணித்த திசையில் டோச் லைட் ஒன்று என்னை மறித்தது. நானும் பாடல் சத்தத்தை குறைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தி ஹேன் பிறேக்கை இழுத்துவிட்டுக்கொண்டே வாகனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். "மாத்தயா கோஹேத யன்னே..." என்ற கனத்த குரலுடன் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி எனது வாகனத்துக்கு அருகில் வந்து, நிதானமாக கேட்டுக்கொண்டே வாகனம் முழுவதும் கண்களால் ஸ்கேன் செய்தார். பிறகு அவரின் கேள்விக்கு பதில் வழங்க ஆரம்பித்துக்கொண்டே நான் கீழே இறங்க அவசி

காதலை காத்திடும் காதலன் மனது

Image
கருமேகங்கள் மூடிக்கொள்ள கவிஞர்க்கு நிலவு மறைக்கும்.. மறைவில் முறைக்கும் நிலவு என்னென்று அறியும் மேகத்தின் தவிப்பை....

என் அழகான நாட்கள்...!

Image
நானும் என் கடிகாரமும்  இணைபிரியா நண்பர்கள், இருவரும் ஓடியதை  ஓயாது கூறலாம். கனவுகளும் சவால்களும்  என்னை சாதனையாளனாக்கி கற்பனையில் காட்டி நின்ற  கனவுக் காலமது Image Copyrights reserved to respective owners only பருவம் ஒரு பக்கம் பார்வை ஒரு பக்கமாக  சமூக நாடகத்தில்  நாயகன் நான்! இன்றும் நான் நானாக இருக்காது  நாட்களின் நாளிகைகளுக்குள் கடிந்து கொள்ளும்  சிந்தனை இரைச்சலுக்கு  ஏமாற்றிய கனவுகளை சுமந்த  என் அழகான அன்றைய நாட்கள்....!