Posts

Showing posts with the label பழங்கள்

நள்ளிரவில் நான் சந்தித்த அந்த மூத்த பொலிஸ் அதிகாரி...!

Image
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நாள் சொந்த ஊரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன்(2019). நிறுவனத்தில் அன்று எனக்கு மாலை நேரத்தில் கடமையிருந்தது. தொழிலை முடித்துக்கொண்ட கையோடு, இரவு 11 மணியளவில் எனது வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கிய பயணம் அது, இரவு நேரம், வாகன நெரிசல் இருக்காது. நேர்த்தியான பாதை ஆகையால் சீரான வேகத்தில் என்னுடைய பயணம் தொடர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான தெரிவில் இடைக்கால பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க நானும் சத்தமாக பாடிக்கொண்டே பயணம் நீண்டது.  அதிகாலை 3 மணியிருக்கும், பலாங்கொடை நகரம் தாண்டியதும் நான் பயணித்த திசையில் டோச் லைட் ஒன்று என்னை மறித்தது. நானும் பாடல் சத்தத்தை குறைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தி ஹேன் பிறேக்கை இழுத்துவிட்டுக்கொண்டே வாகனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். "மாத்தயா கோஹேத யன்னே..." என்ற கனத்த குரலுடன் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி எனது வாகனத்துக்கு அருகில் வந்து, நிதானமாக கேட்டுக்கொண்டே வாகனம் முழுவதும் கண்களால் ஸ்கேன் செய்தார். பிறகு அவரின் கேள்விக்கு பதில் வழங்க ஆரம்பித்துக்கொண்டே நான் கீழே இறங்க அவசி...