என் அழகான நாட்கள்...!
நானும் என் கடிகாரமும்
இணைபிரியா நண்பர்கள்,
இருவரும் ஓடியதை
ஓயாது கூறலாம்.
கனவுகளும் சவால்களும்
என்னை சாதனையாளனாக்கி
கற்பனையில் காட்டி நின்ற
கனவுக் காலமது
![]() |
Image Copyrights reserved to respective owners only |
பருவம் ஒரு பக்கம்
பார்வை ஒரு பக்கமாக
சமூக நாடகத்தில்
நாயகன் நான்!
இன்றும் நான் நானாக இருக்காது
நாட்களின் நாளிகைகளுக்குள் கடிந்து கொள்ளும்
சிந்தனை இரைச்சலுக்கு
ஏமாற்றிய கனவுகளை சுமந்த
என் அழகான அன்றைய நாட்கள்....!
அருமை நண்பரே ரசித்தேன் கவிதையை... - கில்லர்ஜி
ReplyDeleteநன்றி. தொடர்ந்தும் உங்கள் மேலான நட்பை எதிர்பார்க்கிறேன்.
Deleteதங்களது தளத்தில் நான் எப்படி இணைத்துக் கொள்வது ? ஃபாலோவர் லிஸ்ட் இல்லையே...
ReplyDeleteசைட் பாரில் இணைக்கப்பட்டுள்ளது தோழா!
Deleteகனவுகள் நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தொடருங்கள்... தொடர்வோம்....
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteஅந்த நாட்களை சுவாரஸ்யமாக வடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி.. உங்கள் மேலான நட்பை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
Delete