அவளும் நானும் கனவில்...

 




ஆடிக் காற்றில் ஆங்கோர்

ரோஜா சிரிக்கக் கண்டேன் ;

மரங்களை முறித்திடுங் காற்றோ

மலரைப் பல்லக்கிற் சுமந்திற்று! 


வளைந்து மண்ணைத் தொட்டிடு

மரங்கள் பந்தல் ஆயிற்று ;

ஒடிந்து சிதரும் இலைகளதே

அங்கே தோரணம் ஆயிற்று! 


பறித்துப் பறக்கும் பூவிதழ்

அனைத்தும் கம்பளம் விரித்தது ;

இலைவழி தெறிக்கும் நீரோ

பளிங்கு முத்துக்கள் தூவிற்று! 


மல்லிகைக்கூட்டம் பன்னீர் ஆயிற்று

மற்றபூக்களோ சாமரம் வீசிற்று ;

விழிமூடி ஒதுங்கிய கூட்டம்

தவறுணர்ந்து தவித்தே போயிற்று ! 


அப்போது விழித்தோர் அனைவருமே சிலையழகில் சிறையினர் ஆயினர் !!


வண்ணந்தீட்டும் வண்ணத்துப் பூச்சியும்

தேன்துளி தெளிக்கும் தேனீக்கூட்டமும் ;

நிழற்குடை பிடித்திட்ட குருவிப்படையும் 

பல்லக்கின் கூடவே பறந்தனலாயிற்று ! 


வேகமுங் கோபமும் வாளுமீட்டியும்

விழிநேரே பாய்ந்திட்ட அம்பும் ;

எனையே வந்து தொட்டிடத்

துடிக்கும் கடார இரும்பும் ! 


போரினிடையே புகுந்த இவளுக்கு

மொத்த விழிகளும் ஆரத்தியிட்டது !! 


வேங்கை யானோ வீசியவாளில் 

பிளந்தஅம்பின் விரிசல் ஊடே ;

கொள்ளை அழகைக் கொள்ளை

அடித்திடும் கொள்ளையன் ஆனேன் ! 


வீசிய வாளை உறையினிலிட்டு

மங்கை முன்னே மண்டியுமிட்டு ;

வீரபுருஷன் எனக்கை உயர்த்தி

கண்கள் காட்டி அழைக்கலானேன் !


மேகம் விலகிட நிலவவள்

தெரியும் இரவைப் போலே ;

பல்லக்குத் துணியும் விலக

என்னை ஒளியில் நிறைத்தாள் ! 



மூச்சைப் பிடித்தே எந்தன்

விழியை உயர்த்தி பேசலானேன் ;

நீட்டிய கையில் எந்தன் விரல்கற்பிடித்து நெருங்கிட லானாள் !


போரில் வீசிய புயற்காற்றில்

புதைந்த வியர்வை ரத்தவாடை ;

மலரவள் வரவில் இங்கே

மயக்கிட மணக்க லாயிற்று ! 


படர்ந்த நெஞ்சில் பிஞ்சுக்

குழந்தைக் கால்கள் போலே ;

கைகள் வைத்துச் சாய்ந்தே

குழந்தை போலே நின்றாள் !


முகம்படர்க் கூந்தலை நானும்

விலக்கி யணைத்துக் கொண்டேன் ;

வஞ்சியவள் கண்ணந் தொட்டு

விழியால் என்னெனக் கேட்டேன் !


கள்ளியவள் இமைகற் சுருக்கி

..... வேண்டும் என்றாள் ;

மறுப்பதுபோற் யானும் விலகிட

கைகள் பிடித்தே

கட்டியணைத்தாள் !




முற்றிச்சிவந்த முல்லைப் பூவை

முறுவலோடு யானும் அள்ளிட ;

சென்றிடு நீயும் விரைந்தே

என்னைச் சேர்ந்திட என்றாள் !


மறுத்திட எனக்கோ மறந்திட

மயக்கதில் நானும் மடிசாய ;

குழந்தை எனவே அவளே

என்னைக் கொஞ்சிட லானாள்...


குழைந்திடு மனமது சேர்ந்திட

கூட்டினுள் இருக்கும் குருவிகளானோம் ;

காற்றைக் கிழித்துப் பறக்கும்நானோ கிளியிடம் சிக்கிய பழமாயானேன் !!



Comments

  1. சிறப்பு.

    //மறுத்திட எனக்கோ மறந்திட

    மயக்கதில் நானும் மடிசாய ;

    குழந்தை எனவே அவளே

    என்னைக் கொஞ்சிட லானாள்...//

    வரிகள் அருமை. படத் தெரிவுகளும் சிறப்பு. ரசித்தேன்....!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களினால் மகிழ்ந்தேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் அழகான நாட்கள்...!

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!