அவளும் நானும் கனவில்...

ஆடிக் காற்றில் ஆங்கோர் ரோஜா சிரிக்கக் கண்டேன் ; மரங்களை முறித்திடுங் காற்றோ மலரைப் பல்லக்கிற் சுமந்திற்று! வளைந்து மண்ணைத் தொட்டிடு மரங்கள் பந்தல் ஆயிற்று ; ஒடிந்து சிதரும் இலைகளதே அங்கே தோரணம் ஆயிற்று! பறித்துப் பறக்கும் பூவிதழ் அனைத்தும் கம்பளம் விரித்தது ; இலைவழி தெறிக்கும் நீரோ பளிங்கு முத்துக்கள் தூவிற்று! மல்லிகைக்கூட்டம் பன்னீர் ஆயிற்று மற்றபூக்களோ சாமரம் வீசிற்று ; விழிமூடி ஒதுங்கிய கூட்டம் தவறுணர்ந்து தவித்தே போயிற்று ! அப்போது விழித்தோர் அனைவருமே சிலையழகில் சிறையினர் ஆயினர் !! வண்ணந்தீட்டும் வண்ணத்துப் பூச்சியும் தேன்துளி தெளிக்கும் தேனீக்கூட்டமும் ; நிழற்குடை பிடித்திட்ட குருவிப்படையும் பல்லக்கின் கூடவே பறந்தனலாயிற்று ! வேகமுங் கோபமும் வாளுமீட்டியும் விழிநேரே பாய்ந்திட்ட அம்பும் ; எனையே வந்து தொட்டிடத் துடிக்கும் கடார இரும்பும் ! போரினிடையே புகுந்த இவளுக்கு மொத்த விழிகளும் ஆரத்தியிட்டது !! வேங்கை யானோ வீசியவாளில் பிளந்தஅம்பின் விரிசல் ஊடே ; கொள்ளை அழகைக் கொள்ளை அடித்திடும் கொள்ளையன் ஆனேன் ! வீசிய வாளை உறையின...